Thursday, September 17, 2015

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் IV screen play is not an art but technique IV

திரைக்கதை எழுதுவது ஒரு கலை அல்ல அது தொழில்நுட்பம் IV 

சீன் சிக்வன்ஸ் [காட்சிகளின் தொடர்சி]

காட்சிகளின்  தொடர்ச்சி தான் சீன் சிக்வன்ஸ்சா ?

 ரொம்ப எளிய தெரிந்த உதாரணத்துடன் சீன் சிக்வன்ஸ் பற்றி பேசிப்பார்ப்போம்.

காட்சி 1: ஒரு மாணவி தன் கல்லூரியில் நடைபெற உள்ள  தன் துறை சார்ந்த போட்டிக்கான விளம்பரத்தை அறிவிப்பு பலகையில் காண்கின்றாள்.

காட்சி 2:அவளின் வகுப்புஆசிரியரை சந்தித்து  போட்டிக்கான விதிகளை கேட்டு தெரிந்து கொள்கின்றாள்.

காட்சி 3:அந்த போட்டி குழுவாக பங்கு எடுத்துகொள்ளவேண்டியது என்பதால்  தன் நெருங்கிய சிநேகிதிகளை  சந்தித்து  குழு அமைக்கின்றாள்.

காட்சி 4: நூலகம் சென்று தேவையான தகவல்களை சேகரிக்கின்றாள்.

காட்சி 5:போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெறுகின்றாள்.

மேல் உள்ள நிகழ்வுகளை  காட்சி படுத்தும் போது அதில் பொருள் பொதிந்த தொடச்சி  இருக்கும் அல்லவா?     மேல் உள்ள தொடர் காட்சிகள் ஒரு குறிப்பிட்ட பாகத்தை  கதையில் நடத்திக்காட்டுகின்றது அல்லவா? அது தான்  காட்சிகளின் தொடர்சி அல்லது    சீன் சிக்வன்ஸ்  என்பது ஆகும்.

அடுத்த காட்சிகளின் தொடர்சி [சீன் சீக்வன்ஸ்]என்பது அந்த போட்டியில் தோல்வி அடைந்த அதே வகுப்பை சேர்ந்த   வேறு ஒரு மாணவனின்  எதிர்வினையாக கூட இருக்கலாம். அவன் கதையின் நாயகனாகவோ அல்லது   வில்லனாகவோ கூட இருக்கலாம்.  அவர்கள் இந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்கான எதிர்வினைகள்  என்னவாக இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.

வில்லன் தோல்வி அடைந்து இருந்தால் :

[1] நண்பர்களுடன் மது அருந்த செல்கின்றான்

[2] டாஸ்மாக் பாரில்  அமர்ந்து தன் நண்பர்களுடன் வெறுப்புடன் பேசிக்கொண்டு இருக்கிறான்.

[3]டாஸ்மாக் பாரை விட்டு வெளிவந்த உடன் அவனின் நெருங்கிய நண்பனுடன் ரகசியமாக என்னமோ பேசுகிறான்.

[4]அடுத்தநாள் வெற்றி பெற்ற மாணவியின் இரு சக்கர வண்டியின் பெற்ரோல் டேங்கில்  சக்கரை கொட்டப்பட்டு  அந்த வண்டி பழுதாக்கப்படுகின்றது.

கதாநாயகன் தேல்வி அடைந்து இருந்தால் :

[1] அந்த மாணவி செமினோர் எடுத்தபோது அவளின் முக பாவனைகளை ,பேசும் அழகை யோசித்து பார்க்கின்றான்.  [அவள் பேசிய காட்சிகள் காட்டப்படுகிறன.]

[2]அடுத்த நாள் கல்லூரியில் சந்திக்கும் அவளை பார்த்து புன்னகை செய்கிறான்.

[3]வகுப்பு அறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது அவள் நோட்ஸ் எடுக்கும் அழகை ரசிக்கின்றான்.

[4] அவளிடம் அவளின் ஈமெயில் ஐடியை கேட்டு வாங்கிக்கொண்டு செல்கிறான்.

[5] அவன் வீட்டில் இருந்து  அவளுக்கு காதல் கடிதம் அவளுக்கு அவளின் ஈமெயில் ஐடிக்கு   அனுப்புகின்றான்.    


மேல் உள்ள கதாநாயகனின்/வில்லன்  எதிர்வினைகள்  கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதுடன்   ஏன் ,எதற்கு , எப்படி என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டே ஒரு கருத்தாக்கத்தை கதையில்  கொடுகிறது அல்லவா? அதனால்  அடுத்தது என்ன என்ற கேள்வி தவிக்க இயலாதது அல்லவா? அடுத்தது என்ன என்ற கேள்வியை எழுப்பாத காட்சி தொடர்கள் [சீன் சீக்வன்ஸ்]மூலம் எந்த பயனும் திரைக்கதையின்  முன்னேற்றத்துக்கு உருவாகாது. அடுத்த அத்தியாயத்தில் ராஜா ராணி படத்தின்  சீன் சீக்வன்ஸ் பற்றி சிந்தித்து பார்த்து இந்த சீன் சிக்வன்ஸ்சை  முடித்துக்கொள்ளலாம்.


தொடரும் .......

previous Chapters :

http://vansunsen.blogspot.in/2015/09/i_17.html
http://vansunsen.blogspot.in/2015/09/ii-screen-play-is-not-art-but.html
 http://vansunsen.blogspot.in/2015/09/iii-screen-play-is-not-art-but.html 

No comments: