Tuesday, September 9, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் கதை Screen Play for the Movie Siva-karthikeyan

கதை : சிவ-கார்திகேயன் 

By K.Senthilkumaran 


ஒரு வயது குழந்தை "சிவா"ஒன்று விபத்தில் பெற்றோரிடம் இருந்து காணாமல் போகிறது. குழந்தையை கண்டு எடுக்கும் திரைபட உதவி இயக்குனர் கார்திகேயன் போலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் நோக்கில் செல்கின்றான். போலிசாரின் கடினமான வேலைச் சூழல் குழந்தையை அங்கு விட்டு விட்டு செல்ல கார்திகேயனை தடுக்கின்றது. பெண் போலிஸ் அதிகாரியுடன் ``பேசி ,குழந்தையின் பெற்றோர் கிடைக்கும் வரை தானே குழந்தையை பார்த்துக்கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொள்கின்றான். இந்த நிலையில் அவன் I I M கல்லூரி தோழியின்,முன்னாள் காதலியின்[ சிவசங்கரி ] மரணம் அவனை தாகுகின்றது குழந்தையை வளர்க்க அவன் தன் சொந்த பழக்க வழக்கங்களை குடி ,சிகரெட் ஆகியவற்றை விடும் நிலைக்கு குழந்தையுடன் ஐக்கியம் ஆகின்றான். குழந்தையை வளர்பதற்கு கற்கின்றான்.குழந்தைக்கும் தனக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுகின்றான். குழந்தைக்காக குழந்தையின் பெயரில் R d மூலம் சேமிக்க தொடங்குகின்றான். இதனிடையில் பெண் போலிஸ் அதிகாரி அவன் குழந்தையை முறையாக வளர்கின்றானா என்று அவன் அப்பார்ட்மெண்ட்க்கு ,பிளட்ட்டுக்கு வந்து பார்வையிடுகின்றார். குழந்தைக்கு பெண் போலிஸ் அதிகாரியை பிடித்து போகின்றது. யாருமற்றவாளான அவள் அதே அப்பார்ட்மெண்ட்க்கு வந்து குடியேருகின்றாள். நைட் ஷிபிட்டில் கால் சென்டரில் வேலை செய்யும் அவன் தோழி குழந்தையை பகலிலும் , கார்திகேயன் இரவிலும் பார்த்துகொள்கின்றார்கள். இதனிடையில் கார்திகேயன் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க பலவாறாக முயல்கின்றான். ஒரு ஆண்டு கழிகின்றது. விபத்தின் காரணமாக மருத்துவ மனையில் சுயநினைவின்றி ,யாருமற்று சேர்க்கபட்டு இருந்த பெண் சிறிது சிறிதா நினைவு திருப்புகின்றாள். தன் கணவன் விபத்தின் இறந்ததை அறிந்தவள் ,குழந்தை எங்கே என்று நினைத்து வருந்துகின்றாள். மருத்துவ மனைக்கு வேறு ஒரு விடயமாக வரும் பெண் போலிஸ் அதிகாரியிடம் தன் குழந்தை பற்றி கூறுகின்றாள்.ஆனால் குழந்தையின் அடையாளங்கள் அவளுக்கு நினவிற்க்கு வர மறுக்கின்றது. இரத்த மாதிரிகள் மூலம், DNA டெஸ்ட் மூலம் குழந்தையின் "தாய் அவள் இல்லை" என்பது என்பது அறியப்படுகின்றது.ஆனாலும் சட்டப்படி அவள் தான் குழந்தையின் தாய் என்பது நிருபணம் ஆகிறது. எப்படி ??? கார்திகேயன் தாயிடம் குழந்தையை ஒப்படைக்கும் நாளும் வருகின்றது. குழந்தையின் பிரிவை மனதளவில் ஏற்க முடியாமல் தன் காருக்குள் சென்று கண்ணீர் விட்டு அழுகின்றான். குழந்தை தாயின் கையில் இருந்து துள்ளி வெளிவர முலலுகின்றது. கார்திகேயன் எங்கு எல்லாம் இருபானோ அங்கு எல்லாம் கை காட்டி அழுகின்றது. எங்குமே கார்திகேயனை காணாத குழந்தை பேறழுகையில் துடிக்க குழந்தையையும் தாயையும் ஆதரவற்றோர் விடுதியில் சேர்க்கும் பொருட்டு பெண் போலிஸ் அதிகாரி அவர்களை அழைத்து செல்ல முயலுகின்றார். போர்டிகோவில் உள்ள காரினை பார்க்கும் குழந்தை அதனை காட்டி அழ ,பாசமிகுதியில் கார்திகேயன் காரில் இருந்து வெளிவந்து குழந்தையையும் அதன் தாயையும் ஏற்கின்றான்.

கதை பிடித்து உள்ளதா நண்பா ?
https://www.facebook.com/groups/Perumalmurugan/
திரைக்கதை தயாராகின்றது.
https://www.facebook.com/groups/618141481573698/

No comments: