Thursday, September 18, 2014

திரைக்கதை படம் : சிவ-கார்திகேயன் காட்சி #16 பின்னணி காட்சி XII Screen Play for the Movie Siva-karthikeyan scene #16 Flashback Scene XII

காட்சி #16: பின்னணி காட்சி காட்சி X I I : பகல் மணி 8 மணி EXT , INT @ IIM -B மாணவிகள் விடுதி-சிவ சங்கரியின் அறை, விடுதிக்கு வெளியே ,சாலை ,காண்டீன்,வகுப்பறை,gum ,நடனமேடை

கார்திகேயனுக்கு செல்போனில் சிவ சங்கரி அழைப்பு விடுக்க அவன் கால்-ஐ கட் செய்கின்றான்.
[தொடர்சியாக 3 முறை இது நடக்கிறது ]

[இளையராசாவின் "How to Name it " போன்ற பின்னணி இசையுடன் பாடல் காட்சி தொடங்குகிறது. அடுத்து  மென்மையும் அழகும் தரும் தமிழ் ராகங்களில் ஒன்றான ஹம்சானந்தி மற்றும் பூர்விகல்யாணி, மற்றும் சுநாதவினோதினி ராகங்களின் கலவையாக "நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்" போன்ற நா. முத்துக்குமார் பாடல்தொடங்குகின்றது
]

மாணவிகள் விடுதியை விட்டு வெளியே வருகின்றாள்.

அவன் ஒத்தை காலில் நின்று காத்து இருக்கும் மரத்தை காண்கின்றாள். அவன் போக்கேயுடன் 'அன்று' நின்ற உருவமும் தெரிகின்றது பழைய நினைவுகள்[கற்பனையாக]

சாலையில் நடக்கின்றாள்....

கார்திகேயனும் அருகில் நடப்பது போல [கற்பனையாக]

காலையில் breakfast சாபிடாததால் காண்டீன் செல்கின்றாள்......

அவன் டீ வாங்கி வந்து பரிமாறும் பழைய நினைவுகள்[கற்பனை].

தனிமையில் அமர்ந்து டீ குடிக்கின்றாள்....

அவள் பின் அவன் அமர்ந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றான் ....

வகுப்பறையில் ஒருவருடன் மற்றவர் பேசிக்கொள்ளவில்லை .......

இடைவேளையில் இவர்கள் இருவர் இருந்தும் பேசிக்கொள்ள வில்லை .....

இருவரும் நட்புடன் பேசிக்கொள்ளும் பழைய நினைவுகள் [கற்பனையாக]

பெஞ்சில் முகம் புதைத்து தன் அழுகையை மறக்கின்றாள் ....

ஏதும் நடக்காதது போல அவன் தன் lap top ல் முழ்கி கிடக்கின்றான் ......

அன்று மாலை வகுப்பு முடிந்து கூட்டமாக மாணவர்கள் வெளியே செல்லும் போது சிவசங்கரியும் செல்கின்றாள்

அவன் தன் இருக்கையில் அமர்ந்தவாறே "சிவா " என்று அழைக்கின்றான்.

அவன் குரல் காற்றில் ,இரைச்சலில் கரைய .... சிவசங்கரி அவன் அழைத்ததை அறியாமல் செல்கின்றாள்.

இருவரும் ஒன்றாய் வகுப்பு விட்டு செல்வது போல [கற்பனையாக]

கோபத்தில் தன் lap top shout down செய்யாமல் மூடும் கார்திகேயன் ....

தன் கோபத்தை குறைக்க Gim ல் கார்திகேயன் வியர்வை வழிய ஆவேசமாக exercise செய்யும் காட்சி ....

தன் சோகத்தை மறக்க சிவசங்கரி நடனமாடும் காட்சி .....

[பாடல் முடிகின்றது ]

காட்சி #16: பின்னணி காட்சி காட்சி XI I முற்றும்

No comments: