Saturday, February 8, 2014

சாதியும் நானும் -கி.செந்தில்குமரன்[Cast and I -K.Senthilkumaran]

 "........பள்ளிப்   பருவம் முடியும்  வரை அவ் உடற்பயிற்சி  ஆசிரியர்   கண்களில்  படாமல்  கால் பந்தாட்ட  களத்தில்  புயல்  போல  ஓடிக்கொண்டு தானே    இருந்தேன்......"

தமிழ்ப் பேராசிரியர்,படைப்பாளி  திரு பொமு-வின் "சாதியும் நானும் "என்ற  கட்டுரை நூலுக்கான  முன்னுரையைப்   படித்த  போது ,எனக்கும்   இப்படி ஒருக்  கட்டுரை எழுதினால்  என்ன  என்று  தோன்றியது. விரல்கள் கணினிப்  பலகையைத்  தானாகவேத்  தட்டத்  தொடங்கின. பற் பல  சம்பவங்கள்  திரைப்படப்  பின்கதைப்  போல  மனதுல்  சுழன்று  அடித்தனஅச்       சம்பவங்களை  காலவரிசைப்படியே  தொகுபாக்கப்  போகின்றேன்.

[1] நான்  மூன்றாவது அல்லது நான்காவது  வகுப்பு  படித்த போது ,எம் உடற்பயிற்சி  ஆசிரியர்  வேப்ப மரத்தடியில்  சும்மாகவே  நின்று  கொண்டு  இருந்த என்னை கூப்பிட்டு  என்ன  சாதி  என  கேட்டார். சாதி தெரிந்தாலும்  தெரியாதது  போல  "திரு  திருஎன  முழித்த  என்னை  அய்யர்  வீட்டுப்  பையனா  எனறு  மீண்டும்    கேட்டார். இல்லை  என்று  பொருள்  பட  தலையாட்டினேன். என்ன  நினைத்துக்  கொண்டாரோ  எனக்குத்  தெரியாது , பின்பு  போகச்  சொல்லிவிட்டார். அதற்கு பின்பு   உடற்பயிற்சி வகுப்புகளில்  நான் ஏன்  ஆசிரியர்  அருகில்  , மரத்தடியில் நிற்கின்றேன் ! பள்ளிப்   பருவம் முடியும்  வரை அவ் உடற்பயிற்சி  ஆசிரியர்   கண்களில்  படாமல்  கால் பந்தாட்ட  களத்தில்  புயல்  போல  ஓடிக்கொண்டு தானே    இருந்தேன்நான் பெரியவன்   ஆனப்  பின்பு     பெரியப்பா  அவ் உடற்பயிற்சி  ஆசிரியரை  தன்  கூடப்  பயின்ற  சகத்  தோழன்  என  தற்ச்  செயலாக கூறியப்  பின்பு தான்  அச்  சம்பவத்தின்  மீதான  என்  மன  இறுக்கம்  தளர்ந்தது.

[2]பத்தாவது  அல்லது  அடுத்த வகுப்பு  பயின்ற  காலக்  கட்டத்தில் "சாதிச்  சான்று  இதழ்" ன்  முக்கியத்தும்  கருதி  அதை  வாங்க நான்  எடுத்த முயற்சிகள் ! ஒன்று ,இரண்டு  நாட்களில்  வாங்கப்பட  வேண்டிய       VAO,RI கையேழுத்துகளை  நம் தமிழகத்தின் "சிறப்பானநடைமுறைகள்   அன்று  உண்மையாகவே  தெரியாததால்  பத்து  நாட்களுக்கு  மேல்  ஆனப்  பின்பு  தமிழகத்தின் எளிய   நடைமுறைகள்  மூலமே பெற்றேன். கையில்   சாதிச்  சான்று  இதழ் கிடைததும்  எதோ  சாதித்த மகிழ்ச்சி !

[3]கல்லூரிப்  படிப்புகாக நான்  வெளியூரில்  இருநத போது  ஆசிரியரான  என்  அம்மா  ,என்  சாதியில்  +2 வில்  முதல்  இடம்  வந்தமைக்காக  சென்னைச்  சென்று  அவர் சாதித்  சங்கத்தில்  பரிசுப்  பெற்றது என்  மனதை  மிகவும்  பாதித்தது. அம்மாவுடன்  பல  மாதங்கள் தீராத சண்டை.     ஆனால் கல்லூரியில்  பயிலவே , திருமணத்துக்கோ     சாதிச்  சான்று  இதழும் ,சாதீயும்  பயன்படாதது [நான்  பயன்படுத்தாத்து] என்  அளவில்   மகிழ்ச்சியை  கொடுக்கின்றது. கல்லூரி நாட்களில்  கம்யூனிஸ்ட்  தோழர்களுடனான  நட்பு [      ] ,அவ்ர்களின்  சாதிய  அடக்கு  முறைக்கு எதிரான  போராட்டங்கள், கருவறை   நுழைவுப்  போராட்டம் ,    ஆகியவை  சாதியத்த்துக்கு  எதிரான  என்  பார்வையை  கூர்மைப்  படுத்தியது. அய்யர்  வைத்து  நல்ல  நாள்  எல்லாம்  பார்க்காமல், யார்  வற்புறுத்தலும் இல்லாமல்     எதோ  ஒரு நாள் சாதிச்  சான்று  இதழ்-யை  கிழித்து  ஏறிய  வைத்தது.

[4]வேலை ,வேலை  என  பல  ஊர்  ஓடினாலும்  ,மல்லச்சமுத்திரம்  செல்லும்  வரை  சாதீ  என்னைச்   தொட்டது  இல்லை.விசைத்  தறி  சிறு  முதலாளிகள்  தம்  குடும்பத்துடன்  எளிய வாழ்க்கை வாழும் சிற்றூர்  அது. அழகீய  ஊர்அங்கு நான்  வாழ்ந்த நான்கு  ஆண்டுளில்  என்  சாதியை  அறியும்  ஆவல்  அங்கு வாழும்  மக்களுக்கு    இரண்டு ,மூன்று  முறை  ஏற்பட்டது. அப்போது எல்லாம்  தமிழன்  எனக்  கூறி  எதிர்கொண்டேன்.

[5] 30+ வயதுகள்  ஆனப்பின்பும்   திருமணமாகாமல்  இருந்த என்னை , என்  நண்பனும்நான்  வேலைச்  செய்த கல்லூரியில்  என்  துறைத்தலைவரும் ] "பிள்ளை சாதியா  ?" , "கேரளப் பெண்  பார்கலாமா" என  அக்கறையுடன்  கேட்பார்முதல்  கேள்விக்கு  குசும்புச்  சிரிப்பையும் ,இரண்டாம்     கேள்விக்கு பதட்டத்துடன்
வேண்டாம்   எனக்  கூறியும் தப்பிப்பேன்.[ திரு பொமு-வின் கங்கணம்  படித்தப்  பின்பு  தான் இரண்டாம்     கேள்விக்கான  பொருள்  விளங்கியது ]

[6] இன்று  நம்மத் தல பெரியார் ,கம்யூனிஸ்ட்டுகள்  , என்   பெரியப்பா  இவர்களை  வழிகாட்டியாக  வைத்து  நானும் கலப்புத் திருமணம்  செய்து  கொண்டு  என்  பொன்சாதியுடனும் ,மகன்  சிவகார்திகேயன் உடனும்     மகிழ்ச்சியாகத்தான்  வாழ்கின்றேன்.


[7] இதைப்  படிக்கும்  உங்களால்  ,நான் பிறந்த சாதீயை  கண்டுபிடிக்க முடிந்தால்  , நான்  இவ்வளவு  நாள் [பிறவிப்  பெருங்கடலின்  பாதியை  கடந்துவாழும்  வாழ்க்கைக்கு  அர்தமே   இல்லை.   

பின் குறிப்பு :

இக்  கட்டுரையில்  இட ஒதுக்கீடுக்கு  எதிராக  பொருள்  கொள்ள  படக்கூடிய  அபாயம்  உள்ளது. என்  அளவில் சாதியை  நான் எதற்கும்  பயன்  படுத்தக்  கூடாது என்பது  தான்  என்  நோக்கம், என் கொள்கைமேலும்  எம்  மாணவர்கள்  பலர் , என்  நண்பர்கள் ,என்  மனைவி  ஆகியவர்கள்   இட ஒதுக்கீடு மூலம்  அடைந்தச்  சமுக ,பொருளாதார முன்னேற்றங்களை   உணர்ந்தும் ,ஆதரித்தும்   தான்    இக்  கட்டுரையை  நான் எழுதியுள்ளேன்.

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்

No comments: