Saturday, January 25, 2014

கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்[விமர்சனம்-1]( Carbon paper You do not know -Perumal Murugan -Essays-Critic-1 )



ஐயா பெருமாள் முருகன் ,

உங்கள் கட்டுரைகள் , சிறுகதைக்கான ஈர்ப்பு[உயிர்ப்பு ] உடன் உள்ளன . உங்கள் நாவல்,சிறுகதைகளை விட உங்கள் கட்டுரைகள் [ கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்] மிகவும் பயன் உள்ளதாகவும் ,எளிய நடையில் அனைவருக்கும் புரியும் படியும் உள்ளன.முதல் முறை உங்கள் எழுத்தை படிக்கும் உறவுகளுக்கு உங்கள் கட்டுரைகளை தான் சுட்டுவேன்.தமிழில் நிறைய கட்டுரைகள் எழுத்து தமிழிலேயே எழுதுங்கள்.நாவல்,சிறுகதைககளில் வட்டார வழக்கையும்,தலித்தியத்தையும் பயன் படுத்துவது மிக்க நன்று.

கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ கட்டுரைகள் – பெருமாள் முருகன்

23 கட்டுரைகள்  உள்ள  இப்புத்தகம் கடந்த 20 ஆண்டுகள் தமிழகத்தின்  சமுக-அரசியல்  நிகழ்வுகளை  மிக  நூட்பமாக  ஆய்துள்ளது.

"மாங்குயில் கூவிடும்  பூஞ்சோலை " யில்  புரட்சிகர  அரசியலை விட்டு  வெளியேறிய பின், தாங்கள்   சனநாயக முறையில்    வேலை கேட்டு போராடியதையும்,போலிஸ்  காட்டிய பூச்சாண்டி [உரிமை  மீறல்களையும்] பதிவு  செய்துள்ளீர்கள்.

"எருமைபாலும் பத்திரிகை  வேலையும்"   யில் தமிழ் கற்றவனின்  கோபம்  [கற்றது தமிழ் பிரபாகரனை  விட] பல  மடங்கு  தெறிக்கின்றது.  உங்களால்  குறைந்த  ஊதியத்தைக்கூட பொறுத்து  இருக்க  முடியும். "ஓற்றுப்பிழைகளை திருத்தக்கூடாது"  என்ற  தடை உங்களை   அப்பத்திரிகையை  விட்டு வெளியேறியது.இக்காரணத்தையே  நீங்கள்  கூறி  வெளியேறி இருந்தால் மிக்க  பொருத்தமாக  இருந்து இருக்கும்.


 "கரித்தாள் தெரியவில்லாயா தம்பீ" யில் புலவர் பெருஞ்சித்தனார் [ சித்திரனார் ?] அவ்ர்களிடம்  தாங்கள் கொண்டுள்ள  மதிப்பீடுகள்  ,தனித்தமிழ்  மீது உள்ள உங்கள்    நம்பிக்கை  வெளிபடுகிறது. நான்  கூகிள்  இட்ட பொது   "பெருஞ்சித்தனார்"  என்று  தான்  அதிக  பதில்  கிடைக்கின்றது.[About 5,000 results]

"ஆட்டோ  வாசகங்கள்"   கட்டுரையில்   தனிமை மனிதனின்  கிறுக்கு  தனங்களை  காட்டியுள்ளிர்கள். இக் கட்டுரையை  படிக்கும்  போது நீங்கள் கற்றது தமிழ் பிரபாகரனை  நினைக்க  வைக்கின்றிர்கள்.

 விமர்சனம் தொடரும்...

அன்புடன் ,
கி.செந்தில்குமரன்

No comments: